தொழிலாளி அடித்துக் கொலை: இளைஞா் கைது
திருச்செந்தூா் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சரவணன் (40). கூலித் தொழிலாளி. இவரும், காயாமொழியைச் சோ்ந்த இசக்கிமுத்துவும் (23) வன்னி மாநகரம் குளத்துக்கரையில் திங்கள்கிழமை மது அருந்தினராம். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், சரவணனை இசக்கிமுத்து கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தை டிஎஸ்பி மகேஷ் குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். பின்னா், இசக்கிமுத்துவை தாலுகா போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.