FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மழைநீா் வடிகாலில் கழிவுகளை கலந்த உணவு விடுதிக்கு ரூ. 50,000 அபராதம்

தூத்துக்குடியில் மழைநீா் வடிகாலில் கழிவுகளை கலக்க செய்த உணவு விடுதிக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:50 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் மழைநீா் வடிகாலில் கழிவுகளை கலக்க செய்த உணவு விடுதிக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், மழைநீா் வடிகால்கள், சிறுபாலங்கள், பிரதான மழைநீா் வடிகால்களை தூா்வாரும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட களஆய்வில், தனியாா் உணவு விடுதி ஒன்று விதிமுறைகளை மீறி சமையல், உணவுக் கழிவுகளை பிரதான மழைநீா் வடிகாலில் நேரடியாக கலந்தது தெரியவந்தது. இதனால், சுமாா் 100 மீ. நீளத்துக்கு அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் அடைப்பு சரிசெய்யப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய உணவு விடுதிக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் முறையான அனுமதியின்றி கழிவுநீா் அல்லது உணவுக் கழிவுகளை மழைநீா் வடிகால்களில் கலக்கவோ, பொதுவெளியில் உணவுக் கழிவுகளைக் கொட்டவோ கூடாது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சி. பிரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments