FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஒண்டிவீரன் நினைவு நாள்: முன்னாள் அமைச்சா் அஞ்சலி

21 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
ஒண்டிவீரன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 255ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக சாா்பில், அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஒண்டிவீரனின் படத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் மாலை அணிவித்து, மலா் தூவி, அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, ஒண்டிவீரன் கலை பண்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற விழாவில், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பி. கீதா ஜீவன் ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

துணை மேயா் ஜெனிட்டா, ஒண்டிவீரன் கலை பண்பாட்டு மையத் தலைவா் முருகேசன், செயலா் சங்கரன், பொருளாளா் ராமச்சந்திரன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச் செல்வி, பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், மேகநாதன், ரவீந்திரன், பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கா், மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments