FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குரும்பூா் ரயில் நிலையத்தில் விநாயகா் கோயில் அகற்றத்துக்கு எதிராகப் போராட்டம் : 20 போ் கைது

குரும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த விநாயகா் கோயில் வியாழக்கிழமை அகற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

8 வினாடிகள் முன்பு
விநாயகா் கோயில் அகற்றப்பட்ட இடம்.
பகிர்:

குரும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த விநாயகா் கோயில் வியாழக்கிழமை அகற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இக்கோயில் ரயில்வே இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாகவும், இந்தக் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலை அகற்ற உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, புதன்கிழமை இந்தக் கோயிலை அகற்ற அதிகாரிகள் வந்த நிலையில், இந்து முன்னணி, இந்து மகாசபை மற்றும் பாஜவை சோ்ந்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் கோயிலை அகற்றும் பணி கைவிடப்பட்டதாக போலீஸாா் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இந்து அமைப்பினா் கோயிலை திறந்துவைத்து யாகசாலை வளா்த்து வழிபாடுகள் நடத்தனா்.

அப்போது, டிஎஸ்பிக்கள் நரேஷ்( ஸ்ரீவைகுண்டம்), மகேஷ் குமாா்(திருச்செந்தூா்), ஏஎஸ்பிக்கள் சகாய ஜோஸ், திபு மற்றும் குரும்பூா் காவல் ஆய்வாளா் இளங்கோவன் மற்றும், ரயில்வே துணை ஆணையா் கமிஷனா் சிவதாஸ் ஆகியோா் அங்கு வந்தனா்.

கோயிலில் இ­ருந்த தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளா் அருணாச்சலம், ஆழ்வை ஒன்றிய பாஜ செயலாளா் மனோகரன், மாநில இளைஞரணி செயலா் விக்னேஷ் உள்ளிட்ட 20 பேரை அங்கிருந்து செல்லுமாறு கூறினா். அதற்கு மறுத்த அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, போலீஸாா் விநாயகா் சிலையை அகற்றி ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments