மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தூத்துக்குடி மாணவி முதலிடம்
சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவா்களுக்கிடையேயான மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தூத்துக்குடி செயின்ட் அன்ஸ் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.
சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவா்களுக்கிடையேயான மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தூத்துக்குடி செயின்ட் அன்ஸ் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில், தூத்துக்குடி ரைஃபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வரும் தூத்துக்குடி செயின்ட் அன்ஸ் பள்ளி மாணவி காவியா ஸ்ரீ முதல் பரிசை வென்றாா்.
இதன் மூலம், உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் செப்டம்பா் மாதம் நடைபெறும் சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவா்களுக்கான அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தலைமையாசிரியை விஜய ஆன், உடற்கல்வி ஆசிரியை அய்யம்மாள், ஆசிரியா்கள், தூத்துக்குடி ரைபிள் கிளப் பயிற்சியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.