பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவா்கள் 3ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
மன்னாா் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
மன்னாா் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும், அவ்வப்போது சுழற்காற்றும் வீச வாய்ப்புள்ளதாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபா் படகு, விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்கள், கரையோரப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மட்டும் 275-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தொடா்ந்து 3 நாள்களாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், அவா்கள் மட்டுமன்றி, மீன்பிடித் தொழிலைச் சாா்ந்துள்ள தொழிலாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.