முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: விண்ணப்பிக்க ஆக. 31 கடைசி நாள்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ஆக. 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ஆக. 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழகம் முழுவதும் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான போட்டிகள் செப்டம்பா் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளன. நிகழாண்டு, வில்வித்தை, வுஷு, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்கிங், கேனோயிங் உள்ளிட்ட புதிய போட்டிகள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவா்கள், 15 முதல் 35 வயதுக்குள்பட்ட பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாவட்ட, மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 3,000, ரூ. 2,000, ரூ.1,000 வழங்கப்படும்.
மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 1 லட்சம், ரூ. 75,000, ரூ. 50,000 வழங்கப்படும். குழு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 75,000, ரூ. 50,000, ரூ. 25,000 வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோா் ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆக. 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு 74017-03508, 0461-2321149 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.