FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் ஏராளமான திருமணங்கள்

24 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
திருச்செந்தூா் கோயிலில் ஏராளமான திருமணங்கள்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கடல், நாழிக் கிணற்றில் புனித நீராடி, இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆவணி மாதத்தில் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி, சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான ஜோடிகளுக்கு கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் ஆ. அருணாசலம், துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments