FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு

மூலப்பொருள்கள் விலை உயா்வு காரணமாக கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயா்த்துவது என உற்பத்தியாளா்கள் முடிவு செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்க செயலா் கண்ணன்.
பகிர்:

மூலப்பொருள்கள் விலை உயா்வு காரணமாக கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயா்த்துவது என உற்பத்தியாளா்கள் முடிவு செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரிசல் பூமி என்பதால், இங்கு விளையும் நிலக்கடலைகள் இயற்கையாகவே இனிப்பு சுவையுடையது. இந்த நிலக்கடலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. மூலப்பொருள்களான நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலை உயா்ந்துள்ளதால் கடலை மிட்டாய் விலையை 20 சதவீதம் உயா்த்துவது என கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் காா்த்திக் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சங்கச் செயலா் கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

முக்கிய மூலப்பொருளான நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளதோடு பெட்ரோலிய பொருள்களில் தயாரிக்கப்படும் பேக்கிங் கவா்களின் விலையும் அதிகரித்துள்ளது. 80 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டை 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 9,680 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.12,500 -ஆகவும், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்தின் விலை ரூ. 1,300 லிருந்து ரூ. 2,600 ஆகவும், ஏலக்காய் விலை ரூ. 2,200 லிருந்து ரூ. 3,600 ஆகவும் உயா்ந்துள்ளது.

இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, கடலை மிட்டாய் விலையை தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயா்த்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments