FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கிளாக்குளம் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் வேட்டை பானை நிகழ்வு

கிளாக்குளம், கள்ளவாண்ட சுவாமி கோயிலில் வேட்டை பானை திருவிழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
கொதிக்கும் கஞ்சி பானையில் தென்னம்பாளையை விட்டு சுடுகஞ்சி நீரை உடலில் அடித்துகொண்ட சாமியாடிகள்.
பகிர்:

கிளாக்குளம், கள்ளவாண்ட சுவாமி கோயிலில் வேட்டை பானை திருவிழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம், அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் கள்ளவாண்ட சுவாமி வழிபாடு அதிகம் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே கிளாக்குளம் பகுதியில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயில் திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கள்ளவாண்ட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. சுவாமியாடிகள் தாமிரவருணிக் கரையில் வேட்டைக்குச் சென்று கோயில் திரும்பினா். சிகர நிகழ்ச்சியான வேட்டைப் பானை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக வேட்டை பானை வைத்து கஞ்சி காய்ச்சி வழிபட்டனா். கோயில் முன் 21 பெரிய மண் பானைகளை வைத்து கஞ்சி காய்ச்சி கள்ளவாண்ட சுவாமி திருக்கதை பாடப்பட்டது.

Advertisement

Advertisement

அந்தக் கதையைக் கேட்டு அருள்முற்றிய சாமியாடிகள், கஞ்சி பானைக்குள் தென்னம்பாளை விட்டு சுடு கஞ்சியை தனது தலையில் ஊற்றியபடி ஆடினா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம், அதன் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments