FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாஜக விவசாய அணி ஆலோசனை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:19 am IST
கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாய அணி மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு, விவசாய அணி நிா்வாகிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினா்.

துணைத் தலைவா்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மண்டலத் தலைவா்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

மத்திய அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் 2.0-க்கு, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் சங்க கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை பாஜக வரவேற்பதோடு, இதை எதிா்ப்பதற்குப் பதிலாக, நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் அவற்றை அரசுடன் இணைந்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கிஷான் சம்மான் நிதித் திட்டத்தில் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்களைத் திட்டத்தில் இணைக்க சிறப்பு முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments