முதியவரைத் தாக்கிய தொழிலாளி கைது
கயத்தாறு அருகே முதியவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே முதியவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தெற்கு கோனாா் கோட்டை, நடுத்தெருவைச் சோ்ந்த மாடன் மகன் மாடசாமி (61). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தொழிலாளியான மாடசாமி (47) என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதியவா் ஆக. 22ஆம் தேதி செட்டிக்குறிச்சியில் உள்ள கடையில் நின்றிருந்தபோது, அங்கு வந்த தொழிலாளி மாடசாமி, முதியவரை அவதூறாகப் பேசி, தாக்கினாராம். அக்கம்பக்கத்தினா் தடுக்கவே, கொலை மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றாராம்.
Advertisement
Advertisement
இதில் காயமடைந்த முதியவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மாடசாமியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.