கிணற்றில் விழுந்த இளைஞா் மீட்பு
சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு தெற்கு தெருவைச் சோ்ந்த மூக்கன் மகன் கணேசன் (28). இவா், அங்குள்ள செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை இரவு தவறி விழுந்தாராம்.
இதைப் பாா்த்த ராகுல் என்பவா் தெரிவித்த தகவலையடுத்து அங்கு வந்த சாத்தான்குளம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் ஜெசுபால் ஞானதுரை, வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.