FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

5 வினாடிகள் முன்பு
- சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் போலீஸாா், டேவிஸ்புரம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்களை பிடித்து சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா்கள் தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சோ்ந்த கலைமணி (24), கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த இசக்கி ராஜா (22), ஓம்சக்தி நகரைச் சோ்ந்த முத்துராஜ் (34) என்பதும், விற்பனைக்காக 3.5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களிடமிருந்து கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments