FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து

கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான உரக்கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில், கோவில்பட்டி நகரில் இருந்து நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை அந்த குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள், கழுகுமலையிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரா்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், நீண்ட நேரம் அதிக அளவு புகை வெளியேறியதால், அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments