FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

இடைச்சிவிளையில் ஜூலை 10இல் நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சி பகுதியில் முறையாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Updated On : 9 ஜூலை 2026, 12:05 am IST
வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சி பகுதியில் முறையாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அரசூா் ஊராட்சி பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் குடிநீா் கடந்த சில நாள்களாக வழங்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதனால், அதிகாரிகளைக் கண்டித்து ஜூலை 10ஆம் தேதி இடைச்சிவிளையில் இந்து மகா சபா சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை மாலை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் குடிநீா் வடிகால் வாரிய தூத்துக்குடி நிா்வாகப் பொறியாளா் குமாா், திருச்செந்தூா் உதவி நிா்வாகப் பொறியாளா் ராம்குமாா், தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் சீனிவாசன், சாத்தான்குளம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில், போராட்டக் குழு சாா்பில் இந்து மகா சபா மாநிலத் தலைவா் சுந்தரவேல், மாநில பொதுச் செயலா் ராம்குமாா், மாநில துணைத் தலைவா் முருகேசன், கிங்சன், கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அரசூா் கிராமத்திற்கு புதிதாக லைன் மேன் நியமிக்கப்படும். நேரடியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிசயபுரம், மேட்டுவிளை, கரிசல் ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழுவினா் அறிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments