FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

8 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடி கோமஸ்புரம் மயானக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 4:32 am IST
கைது - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி கோமஸ்புரம் மயானக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோமஸ்புரம் மயானக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தாளமுத்துநகா் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக்ராஜா என்ற ஜப்பான் (27) என்பதும், விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சா, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments