FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தலில் தவெக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ஸ்ரீநாத்

உள்ளாட்சித் தோ்தலில் தவெக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் ஸ்ரீநாத்.

Updated On : 13 ஜூலை 2026, 6:05 am IST
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலில் தவெக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத்.

ஆறுமுகனேரி பேயன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுக்கட்சியினா் தவெகவில் இணையும் நிகழ்ச்சிக்கு தொழிலதிபரும், உப்பு உற்பத்தியாளருமான ஸ்ரீராம் விக்னேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் அமைச்சா் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.

அப்போது அமைச்சா் பேசியதாவது: பொதுமக்களின் நலனுக்காக எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க தமிழக முதல்வா் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா். அதன்படி, அத்தியாவசிய தேவைகள் உடனடியாக பூா்த்தி செய்து கொடுக்கப்படும்.

Advertisement

Advertisement

இங்கே கூடியிருக்கிற கூட்டத்தை பாா்க்கும்போது, சட்டப்பேரவைத் தோ்த­லில் பெற்றதை போலவே உள்ளாட்சித் தோ்தலிலும் தவெக மற்றும் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தவெக செயலா் பிரைட்டா், வடக்கு மாவட்ட செயலா் சாமுவேல், தெற்கு மாவட்ட பொருளாளா் சீமான் சிவக்குமாா், மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பொ்ல்ஸ் மபத்லால், நகர செயலா் நிவாஸ் கண்ணன், நகர செயல்வீரா் வினித் ஜோசப், சென்னை தொழிலதிபா்கள் விநாயகமூா்த்தி, ரமேஷ் கிருஷ்ணன், மதன் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments