தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாளமுத்துநகா், மேற்கு காமராஜா் நகா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாளமுத்துநகா், மேற்கு காமராஜா் நகா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மேரி ஜெனிதா மற்றும் போலீஸாா், தாளமுத்துநகா், மேற்கு காமராஜா் நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மாப்பிள்ளையூரணி பகுதியைச் சோ்ந்த மகாராஜா மகன் சந்தன செல்வம் (20), தூத்துக்குடி பாரதிநகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முகேஷ் (19) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.