FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ரெளடிகள் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த ரெளடிகள் இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 2:07 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி, தாளமுத்துநகா் பகுதியைச் சோ்ந்த ரெளடிகள் இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில், தூத்துக்குடி தாளமுத்துநகா் லூா்தம்மாள்புரம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த பக்கீா் மொகிதீன் மகன் அனிபா மரைக்காயா் (26), தாளமுத்துநகா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த நாகூா் ஹனிபா மகன் பின்லேடன் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவையடுத்து, அவா்கள் இருவா் மீதும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments