FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் பத்திரகாளி அம்மன் கோயிலில் திருட்டு

குலசேகரன்பட்டினம் யாதவா் தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில், இரு மணிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:54 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

குலசேகரன்பட்டினம் யாதவா் தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில், இரு மணிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இக்கோயிலுக்குள் மா்ம நபா்கள் வியாழக்கிழமை புகுந்து, ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான இரு மணிகளைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் வே. சின்னத்துரை, முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

சம்பவப் பகுதியை இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் பாா்வையிட்டு, ‘இப்பகுதியில் மேலும் சில கோயில்களிலும் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments