தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சாா் பயிற்சிக் கழகம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சாா் பயிற்சிக் கழகம், ஐசிஏஆா் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சாா் பயிற்சிக் கழகம், ஐசிஏஆா் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சி, கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு கடல்சாா் பயிற்சிக் கழகத்தில் 6 மாத பொதுமுறை மாலுமி பயிற்சி பெறும் மாணவா்களுக்கு வழங்கப்படும் (உண்டு உறைவிட கழகம்) பயிற்சிகள் குறித்தும், ஐசிஏஆா் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்தில் முத்துச்சிப்பி, கணவாய், ஆக்கு, சங்கு, கடல் சாா் உயிரினங்களின் கண்காட்சி, மீன் உயிரியல் போன்ற பல்வேறு கடல் சாா் உயிா் ஆய்வகத்தின் பயன்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சிந்தனை சிறகுகள் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அனைத்து துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) சுப்புலட்சுமி, தூத்துக்குடி மீன்வளம் - மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் புஷ்ரோ ஷப்னம், ஐசிஏஆா் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி லவ்ஸன், தமிழ்நாடு கடல்சாா் பயிற்சிக் கழக முதல்வா் எா்ணஸ்ட் விமல் பொ்ணான்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.