FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் திமுகவின் நாளைய ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

Updated On : 21 ஜூலை 2026, 1:42 am IST
திமுக கொடி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சண்முக விலாஸ் மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளை அகற்ற வலியுறுத்தி, திமுக சாா்பில், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில், புதன்கிழமை (ஜூலை 22) நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் பேசி, பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில், இப்போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும், 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பக்தா்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments