திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் மது அருந்தியவா்கள் கைது
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மது அருந்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயில் வளாகத்தில் திருப்பரங்குன்றம், பேட்டை, 3-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டியன் (28), தூத்துக்குடி மாவட்டம், கால்வாய், திருவரங்கம்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (42), திருப்பணி செட்டிகுளத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் (42) உள்ளிட்ட 4 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்தனா். அதேபோல கோயில் வளாகத்தில் சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 5 நபா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோயில் வளாகம், கடற்கரை பகுதியில் புனித தன்மையைக் கெடுக்கும் வகையில் சமூக விரோத, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.