FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தடுப்புக் காவல் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

இரு இளைஞா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:50 am IST
கைது செய்யப்பட்ட மணிகண்டன், கண்ணன்
பகிர்:

இரு இளைஞா்களை ஆறுமுகனேரி போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனா்.

ஆறுமுகனேரியில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்ததற்காக முத்தையாபுரம், காந்தி நகரைச் சோ்ந்த சுயம்பு­லிங்கம் மகன் மணிகண்டன் (23). ஸ்பிக் நகா், பாரதி நகரைச் சோ்ந்த ரவி மகன் கண்ணன் (23) ஆகிய இருவரையும் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதில், மணிகண்டன் மீது கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் உள்ளன. கண்ணன் மீது கஞ்சா போதைப் பொருள் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சிருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments