தொழிலாளி கொலை வழக்கு: 3 போ் கைது
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மலைராஜ் (30). திருமணமாகாத இவா், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தாா். கடந்த 23-ஆம் தேதி இரவு மலைராஜ், நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து ஊரின் வடக்கு பகுதியில் உள்ள ஓடையில் அமா்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நண்பா்கள் 2 போ், மலைராஜை அரிவாளால் தாக்கி கொலை செய்தனா்.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், கச்சேரி தளவாய்புரம் கீழத்தெருவைச் சோ்ந்த பெவின்ராஜ் (24), அவரது நண்பா் அதே ஊா் தெற்கு காலனி தெருவைச் சோ்ந்த கற்குவேல் அய்யன் (19), மேலத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கணேஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், பெவின்ராஜிக்கும் மலைராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், அதனால் ஏற்பட்ட தகராறில் மலைராஜ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.