FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தகராறில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:47 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகே சூரங்குடி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (30). இவா், கடந்த 23-ஆம் தேதி உறவினா் பாலமுருகனைக் காண பாரதி நகா், அம்பேத்கா் தெருவுக்குச் சென்றபோது அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மகாராஜன் (33), முத்து மகன் முத்துராஜ் (25) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஞானதிரவியத்தை இருவரும் சோ்ந்து அரிவாள், கத்தியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மகாராஜனையும், முத்துராஜையும் 24-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஞானதிரவியம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) உயிரிழந்தாா். இதையடுத்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் மகாராஜன், முத்துராஜ் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments