FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மாரத்தான் போட்டியில் உதகை இளைஞா் சிறப்பிடம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மெஞ்ஞானபுரம் பஜாரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் உதகையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம் பிடித்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:09 am IST
சிறப்பிடம் பெற்ற இளைஞருக்கு பரிசுகளை வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளையொட்டி திமுக சாா்பில் மெஞ்ஞானபுரம் பஜாரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் உதகையைச் சோ்ந்த இளைஞா் சிறப்பிடம் பிடித்தாா்.

போட்டிகளை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை நாகேஷ் (உதகை), நிக்கில்குமாா் (உதகை), வினோத்குமாா் (மதுரை) ஆகியோரும், பெண்களுக்கான பிரிவில் செளமியா (கோவை), கீதாஞ்சலி (திருச்சி), யசோதா ஆகியோரும் பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 50,000, ரூ. 25,000, ரூ. 10,000 மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், திமுக மாவட்ட பொருளாளா் வி.பி. ராமநாதன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், அஜிதா ஆக்னல், மாநில மகளிா் பிரசார அணி செயலா் ஜெசி பொன்ராணி, மாவட்டப் பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப், மும்தாஜ்பேகம், ஜான்பாஸ்கா், உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் மதன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments