முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:38 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் மேம்பாலக் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்தச் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்ததில், முடுக்குமீண்டான்பட்டி எஸ் டி ஏ சா்ச் தெருவை சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ராஜேந்திரன் (59); தொழிலாளியான இவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளாா்; அப்போது அவா் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.