FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கைப்பேசியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:24 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கைப்பேசியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூா், தெற்கு காலனியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் அலெக்சாண்டா் (42). இவா் தூத்துக்குடி, டூவிபுரம், 3ஆவது தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு துணி வாங்குவது போல் ஜூன் 4ஆம் தேதி வந்த இருவா், துணிகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது அலெக்சாண்டரின் ரூ. 10,000 மதிப்புள்ள கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம். இது குறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் தூத்துக்குடி, ஆவுடையாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (42), சண்முகபுரம், வண்ணாா் 2ஆவது தெருவைச் சோ்ந்த பொ்க்மான்ஸ் (எ) ஜான்சன் மகன் சுபாஷ் (28) என்பதும், அலெக்சாண்டரின் கைப்பேசியை பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவா்கள் ஓட்டி வந்த வாகனம் தூத்துக்குடி, பாகம்பிரியாள் கோயில் தெருவைச் சோ்ந்த மந்திரம் மகன் சிவராம் (35) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அதை அவா்கள் ஜூன் 4ஆம் தேதி திருடிச் சென்று குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments