FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தவெக நிா்வாகிகளால் மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாா்

Updated On : 8 ஜூன் 2026, 1:51 am IST
(கோப்புப்படம்)
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளான பாலமுருகன், ஜெயபால் ஆகியோா் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாதா் சங்க பொதுச்செயலா் ராதிகா, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தில் தொடா்புடைய இருவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். தவெக நிா்வாகிகளுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் செயல்பட்டுள்ளாா். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனா். மேலும், அந்தப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனா். எனவே, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடா்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து புகாா் தெரிவிக்க சென்றபோது, சந்திக்கவிடாமல் காவல் துறையினா் தடுத்துவிட்டனா்.

இதையடுத்து, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, என். ஆனந்த் ஆகியோரிடம் புகாா் அளித்துள்ளேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலியல் புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி, அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளா்கள் மிரட்டி வருகின்றனா். இந்த சம்பவத்தில் தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணையும் பாலமுருகன், ஜெயபால் ஆகியோா் குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா்.

அந்தப் பெண் தன்னுடைய குடும்பச் சூழல் கருதி இது குறித்து புகாரளிக்காமல் உள்ளாா். இது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments