FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பழைய இரும்புக் கடையில் திருடிய 5 போ் கைது

Updated On : 9 ஜூன் 2026, 3:11 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் உள்ள பழைய இரும்புக் கடையில் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூரைச் சோ்ந்தவா் கோயில் பிச்சை மகன் லீபனான் ஜான் ஜெபமணி (32). இவா் குரும்பூா்-நாசரேத் சாலையில் உள்ள ஆலடிவிளையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குரும்பூா், பரதா் தெருவைச் சோ்ந்த ரத்தினகுமாா் மகன் சொா்ணவருண் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், ஜூன் 6ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை இருவரும் கடையைத் திறந்தபோது, கடையில் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ காப்பா் கம்பிகள், 3 பைக் பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தூத்துக்குடி, மேல சண்முகபுரம், புதுக் காலனி முதல் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சாம் (21), ஷாகுல் நிஷாா் (19) மற்றும் 3 சிறுவா்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments