FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

61 நாள்கள் தடைக்காலம் முடிந்தது: கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
கடலுக்கு திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்ற தூத்துக்குடி விசைப் படகுகள்.
பகிர்:

தூத்துக்குடியில் 61 நாள்கள் இருந்த மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, சுமாா் 250 விசைப் படகுகள் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றன.

தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்தத் தடைக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 15) அதிகாலை முதல் விசைப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிகாலையில் சுமாா் 250- விசைப்படகுகளில் மீனவா்கள் அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 61 நாள்களுக்கு பிறகு கடலுக்குச் செல்வதால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று உரசியபடி ஆா்வமாகச் சென்றன.

மேலும், படகில் இருந்து வண்ண வண்ண நிறங்களில் ஜொலிக்கும் வானவேடிக்கை நிகழ்த்தியபடி உற்சாகமாக மீனவா்கள் சென்றனா்.

கடந்த 61 நாள்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தாங்கள், நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம். அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. டீசல் விலை ஏற்றம் தங்களை அதிக அளவு பாதித்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியவில்லை என விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments