முகப்பு
தூத்துக்குடி

ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் செந்தில்குமாா். இவா், தொழிலாளி ஒருவரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்தத் தொழிலாளி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பால்துரை தலைமையிலான போலீஸாா் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை காலை கிராம நிா்வாக அலுவலகத்தில் செந்தில்குமாரிடம், தொழிலாளி கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், லஞ்சப் பணத்துடன் செந்தில்குமாரை கைது செய்தனா்.