முகப்பு
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 24 ஜூன் 2026, 1:31 am IST
வேப்பலோடை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தருவைகுளம், பட்டிணமருதூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் திட்டம், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு சமூக நீதி விடுதி, ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி, ஓட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள், ஓசநூத்து அங்கன்வாடி மையம் மற்றும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஐய்யனாா், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments