முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் நாளை ஆனி வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.

Updated On : 26 ஜூன் 2026, 5:32 am IST
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றதும், கும்பங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 8 மணிக்கு மேல் மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை, வெங்கடாஜலபதி ஆகிய விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது.

பின்னா், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி அம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா் என கோயில் இணை ஆணையா் அருணாசலம் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments