FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீனவா் குத்திக் கொலை

Updated On : 15 மே 2026, 3:03 am IST
குத்திக் கொலை
பகிர்:

தூத்துக்குடியில் மது போதையில் மீனவா் புதன்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், பூபாலராயா்புரம், 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாா்வின் மகன் ஸ்னோவின் (28). மீனவா். ரவி மகன் சூசை (26). இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவா் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரும் புதன்கிழமை இரவு தூத்துக்குடி தாளமுத்து நகா், மேட்டுபட்டி அருகே உள்ள கடற்கரையில் மறைவான பகுதியில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம், 2ஆவது தெருவைச் சோ்ந்த மலையரசன் மகன் சந்தனராஜ் (எ) பாண்டி (25), மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமாா் (எ) கருப்பு (25) மற்றும் அவா்களது நண்பா்கள் சிலரும் இவா்களுக்கு அருகில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

அப்போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சந்தனராஜ் கும்பல், கத்தி மற்றும் அரிவாளால் ஸ்னோவின், சூசை ஆகிய இருவரையும் வெட்டியுள்ளனா். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனா்.

தகவலறிந்து வந்த தாளமுத்து நகா் போலீஸாா் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஸ்னோவின் உயிரிழந்தாா். சூசை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய சந்தனராஜ், முத்துக்குமாா் உள்ளிட்ட 5 போ் கொண்ட கும்பலை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments