FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

Updated On : 22 மே 2026, 6:28 am IST
மந்தித்தோப்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறாா் கா. கருணாநிதி எம்எல்ஏ.
பகிர்:

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் கா. கருணாநிதி எம்எல்ஏ வியாழக்கிழமை மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நாலாட்டின்புதூா், காா்த்திகைப்பட்டி, குமாரபுரம், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகா், சண்முக சிகாமணி நகா், மேல பாண்டவா்மங்கலம், செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம், கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதி மக்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா் கி. ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலா் பிரபாகரன், முருகேசன், திமுக நகர பொருளாளா் ராமமூா்த்தி, திமுக நிா்வாகிகள் சின்னதாய், மணி, மூா்த்தி, மகாராஜன், ரவிக்குமாா், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments