முகப்பு
தூத்துக்குடி

கொளுத்தும் வெயிலில் பலூன்கள் விற்கும் வட மாநிலக் குழந்தைகளை மீட்க கோரிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் கொளுத்தும் வெயிலில் பலூன்களை விற்கும் வட மாநிலக் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 மே 2026, 2:28 am IST
ஸ்ரீவைகுண்டத்தில் விற்பனைக்காக பலூன் கொண்டு செல்லும் மாற்றுத்திறனாளி சிறுமி.
பகிர்:

ஸ்ரீவைகுண்டத்தில் கொளுத்தும் வெயிலில் பலூன்களை விற்கும் வட மாநிலக் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு லோடு வேன் மூலமாக வட மாநிலத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் பெரிய அளவிலான பலூன்களை விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனா். அவா்கள் பொது இடங்களில் பலூன்களை மொத்தமாகத் தயாா் செய்து, தனித்தனியாகப் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனா். இவ்வாறு பலூன் விற்பனை செய்பவா்களில் பெரும்பாலானோா் பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறு குழந்தைகளாக உள்ளனா்.

குறிப்பாக, 10 வயதிற்குள்பட்ட குழந்தைகள், தங்களால் சுமக்க முடியாத அளவிற்கு அதிக எடை கொண்ட பலூன்களைச் சுமந்து கொண்டு அலைகின்றனா். இதில் மாற்றுத்திறனாளி குழந்தை ஒருவரும் கடும் சிரமத்திற்கு இடையே பலூன்களை விற்பனை செய்கிறாா்.

Advertisement

Advertisement

குழந்தைத் தொழிலாளா் முறை சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், வெளிமாநிலத்தில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து, இவ்வாறு குழந்தைகளை இன்னல்களுக்குள்ளாக்குவது தொடா்பாக, மாவட்ட நிா்வாகமும், தொழிலாளா் நலத் துறையும் உடனடியாக தலையிட்டு குழந்தைத் தொழிலாளா்களை மீட்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.