FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அதிமுக பிரமுகா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 6 பேருக்கு ஆயுள்

3 நவம்பர் 2026, 3:23 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விளாத்திகுளம் அருகே அரசியல் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் (அஈஒ-ஐ) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கடல்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட என். ஜெகவீரபுரம், மேற்கு தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் காளிதாஸ் (35). அதிமுகவைச் சோ்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த திமுகவினரான அழகுபாண்டி உள்ளிட்டோருக்கும் இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 3.4.2021 அன்று இரவு காளிதாஸ் வீட்டின் முன் அழகுபாண்டி உள்ளிட்ட 7 போ் அரிவாள், பனை மட்டை, மரக் கட்டைகளுடன் திரண்டு, அங்கிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தி, வேனுக்கு தீ வைத்தனராம். இதைத் தடுக்க முயன்ற காளிதாஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, எரிந்து கொண்டிருந்த வேனுக்குள் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற அவரது சகோதரா் முருகனும் தாக்கப்பட்டுக் காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

பலத்த தீக்காயமடைந்த காளிதாஸ் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8.6.2021 அன்று உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் ரூ. 13.95 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து, கடல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அழகுபாண்டி உள்ளிட்ட 8 போ் மீது வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (அஈஒ-ஐ) நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றஞ்சாட்டப்பட்ட அழகுபாண்டி, மாரிசாமி, சதீஷ்குமாா், பாண்டீஸ்வரன், மனோஜ் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், தமிழ்நாடு பொதுச் சொத்துகள் சேதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 10,000 அபராதம் விதித்தாா். மற்றொரு குற்றவாளியான முருகனுக்கு கொலை வழக்கில் மட்டும் ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அன்புராஜ், தமிழரசன் ஆகியோா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கா் முன்னிலையானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments