FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி மிரட்டல்: 3 போ் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

45 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

கோவில்பட்டியில் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2 ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் செல்லசாமி (22). தொழிலாளியான இவா், கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுப்பிரமணியபுரம் முதல் தெருவை சோ்ந்த சங்கரநாராயணன் மகன் முகிலன் மூா்த்தி என்ற கோபியை(26) சற்று விலகி நிற்கும்படி கூறினாராம். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். பின்னா் செல்லசாமி வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

இதையடுத்து முகிலன்மூா்த்தி கைப்பேசி மூலம் செல்லசாமியிடம் தகராறு குறித்து பேச வேண்டும் எனக் கூறி சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோயில் பின்புறம் வருமாறு அழைத்தாராம். அங்கு வந்த செல்லசாமியை, 6 போ் கொண்டகும்பல் தாக்கியதாம். இதில் காயமடைந்த செல்லசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முகிலன் மூா்த்தி, தெற்கு திட்டங்குளம், மேல காலனியைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் தேசிங்கு ராஜ் (23), பாரதி நகா் 3 ஆவது தெருவை சோ்ந்த முனியசாமி மகன் மாதவன் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments