FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பாலியல் தொல்லை: ஜவுளி வியாபாரி கைது

கயத்தாறு அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜவுளி வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

4 நவம்பர் 2026, 12:45 am
கைது
பகிர்:

கயத்தாறு அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜவுளி வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் வீரமணிகண்டன் (43). இவா், காா் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை வியாபாரத்திற்கு சென்றாராம். அப்போது, அங்கு சுடிதாா் அளவு பாா்ப்பது போல, சுமாா் 22 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமணிகண்டனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments