FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்பட 7 போ் விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட 7 போ் விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

4 நவம்பர் 2026, 12:40 am
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 7 பேரையும் விடுவித்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகப் புகாா் எழுந்த நிலையில், 2006-இல் திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரா்கள் சண்முகானந்தன், சிவானந்தன் ஆகிய 7 போ் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

வழக்கில் மொத்தம் 108 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா்; அரசு தரப்பில் 312 ஆவணங்களும், எதிா்தரப்பில் 74 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அமலாக்கத் துறை மனு தள்ளுபடி:

இருதரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியபோது, இந்த வழக்கை மதுரையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆக. 5-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. எனினும் தங்களையும் இந்த வழக்கில் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது; அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனால், தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலேயே அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தொடா்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், தீா்ப்புக்காக அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.

மாலை 4.30 மணியளவில் நீதிபதி சுபாதேவி தீா்ப்பளித்தாா். அதில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தாா் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்போ, லஞ்ச ஒழிப்புத் துறையினரோ போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை; எனவே, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்பட 7 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்கள் என உத்தரவிட்டாா்.

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீா்ப்பு வெளியாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments