FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் பலத்த மழை

திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

48 வினாடிகள் முன்பு
பலத்த மழை காரணமாக சந்நிதி தெருவில் ஆறாக ஓடிய வெள்ள நீா்.
பகிர்:

திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக கடந்த வாரங்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை திருச்செந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, திருச்செந்தூா் சிவன் கோயில், சந்நிதி தெரு, பகத்சிங் பேருந்து நிலையம், தினசரி சந்தை, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீா் தேங்கியது.

Advertisement

Advertisement