FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

8 நவம்பர் 2026, 3:05 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மில்லா்புரம் பா்மா காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கைலாசம் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது மனைவி தகாத தொடா்பு காரணமாக வேறு நபருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கைலாசம், வெள்ளிக்கிழமை இரவு கதிா்வேல் நகா் பகுதியிலுள்ள உறவினருக்குச் சொந்தமான பழைய காகிதக் கிடங்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement