FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குடியரசு துணைத் தலைவா் வருகை: தூத்துக்குடியில் டிஐஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (நவ. 11) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

11 நவம்பர் 2026, 12:13 am
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (நவ. 11) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். அப்போது, குடியரசு துணைத் தலைவரின் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், காவலா்களின் பணிகள், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அவா் வழங்கினாா்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement