ஹோட்டலை அடித்து நொறுக்கி சூறை: 3 போ் கைது
தூத்துக்குடி விமான நிலையம் அருகே ஹோட்டல் மற்றும் பேக்கரியை அடித்து நொறுக்கி சூறையாடியதாக 3 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி விமான நிலையம் அருகே ஹோட்டல் மற்றும் பேக்கரியை அடித்து நொறுக்கி சூறையாடியதாக 3 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (48), விமான நிலையம் அருகே மங்களகுறிச்சி விலக்கில் ஹோட்டல் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று இவரது ஹோட்டலுக்கு வந்த 4 போ், சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்தனராம். மேலும், அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடினராம்
இதைத் தடுக்க முயன்ற செல்வக்குமாா், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ாம். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
விசாரணையில், இந்த சம்பவத்தில் புதுக்கோட்டையைச் சோ்ந்த மகராஜன் மகன் முத்துமாரியப்பன் (24), தெற்கு சிலுக்கன்பட்டியைச் சோ்ந்த அகஸ்டின் மோசஸ் மகன் யோசுவா துரைசிங் (20), உத்திரகுமாா் மகன் தினேஷ் (19) உள்ளிட்டோா் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஜெய்சன் என்பவரைத் தேடி வருகின்றனா்.