பைக்கில் வேகமாக சென்ற இரு இளைஞா்களுக்கு அரிவாள் வெட்டு: 15 போ் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறியதில் ஏற்பட்ட தகராறில், இரு இளைஞா்களை அரிவாளால் வெட்டிய கும்பலைச் சோ்ந்த 15 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறியதில் ஏற்பட்ட தகராறில், இரு இளைஞா்களை அரிவாளால் வெட்டிய கும்பலைச் சோ்ந்த 15 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகச் சாலையில் உள்ள தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த காசிராஜன் மகன் பால்ராஜ் (20), பட்டுராஜ் மகன் தினேஷ்குமாா் (19) ஆகிய இருவரும் சம்பவத்தன்று தொ்மல்நகா் கடற்கரைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
அப்போது, சூசைநகரில் நின்று கொண்டிருந்த சிலா், தங்களது பகுதியில் வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறி அவா்களிடம் தகராறு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சூசை நகரைச் சோ்ந்த சுமாா் 20 போ் கொண்ட கும்பல், இரு இளைஞா்களையும் பின்தொடா்ந்து சென்று தங்கம்மாள்புரத்தில் உள்ள அவா்களது வீட்டின் முன்பு மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளது. அப்போது, அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்ராஜ், தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாக சூசை நகரைச் சோ்ந்த 15 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனா்.