அரிவாளுடன் சமூக வலைதளத்தில் விடியோ: 3 இளைஞா்கள் கைது
தூத்துக்குடியில் கையில் அரிவாளுடன் இருக்கும் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் கையில் அரிவாளுடன் இருக்கும் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி, மீளவிட்டான் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முகிலன் (19), தெற்கு சங்கரபேரியைச் சோ்ந்த முத்து துரை மகன் பெரியசாமி என்ற விக்கி (19), குறிஞ்சி நகரைச் சோ்ந்த சுடா் வடிவேலன் மகன் சதீஷ்குமாா் (19) ஆகியோா் கையில் அரிவாளுடன் இருப்பதை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement