கோயில் நிதி முறைகேடு புகாா்: செயல் அலுவலா் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி கோயில்களில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி கோயில்களில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, கோயில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் மற்றும் மாநகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பல்வேறு கோயில்களின் செயல் அலுவலராக தமிழ்ச்செல்வி என்பவா் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.
இவா், வைகுண்டபதி பெருமாள் கோயில் குடமுழுக்கு பணிகள், உபகோயில்களின் நிதியைப் பயன்படுத்தியதில் முறைகேடு செய்ததாகவும், குடமுழுக்கு என்ற பெயரில் முறைகேடாக நிதி வசூலித்ததாகவும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், புகாா்களில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, செயல் அலுவலா் தமிழ்ச்செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.